முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆறு நாள் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி

01 Jul 2026

நாள் 1 : 01.07.2026

2026-2027 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆறு நாள் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி
நடைபெற்று வருகின்றது.  திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற முதல் நாள் (01.07.2026, புதன்கிழமை) நிகழ்வில்,  கல்லூரி முதல்வர் முனைவர். K.M சுமதி அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
 
கல்லூரி முதல்வர் தம் வரவேற்புரையில்
உலகில் மனிதர் வாழ்வியலுக்கான இலக்கணம் வகுத்த திருவள்ளுவர் அவர்களின், 
 
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
 
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, இக்குறட்பாவில் துணை எழுத்து இல்லாது இருப்பது போல, தெளிவாகக் கல்வி கற்கும் ஒவ்வொருவரும் யார் துணையும் இன்றி தனித்துவமாக வாழ இயலும் என்று கூறினார்.
 
சிறப்பு விருந்தினராக Internatioal Leadership Coach PS அகாடமி,  சென்னையைச் சேர்ந்த முனைவர். பால் சுசில் அவர்கள் கலந்து கொண்டார்.  மாணாக்கர்களின் திறன் வளர்ப்பு, மனவளக்கலை மற்றும் மனநிலை ஒருநிலைப்படுத்துதல், தன்னிலை அறியச்செய்தல், உயர்சிந்தனை அறியச்செய்தல், மொழித்திறன் மற்றும் சுயமாக எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை பற்றி 2 மணிநேரம் சிறப்புரையாற்றினார். மிகவும் எழுச்சியோடு முதலாமாண்டு மாணவர்கள் பங்கு பெற்று பயன் அடைந்தனர். அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு பயிற்சியை சிறப்பித்தனர். முனைவர். A. கார்த்திகேயன் நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையாற்றினார்.