Safety First! இணையப் பாதுகாப்பு மற்றும் 'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் அசத்தல் விழிப்புணர்வு அமர்வுகள்!

03 Jul 2026

2026-2027 ஆம் கல்வியாண்டின் முதலாண்டு மாணவர்களுக்கான ஆறு நாள் வழிகாட்டுதல் முகாம் (Orientation Programme) கடந்த 01.07.2026 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின், மூன்றாம் நாள் நிகழ்வு (03.07.2026, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இனிமையான துவக்கமாக, வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று வரவேற்புரை (Welcome Address) ஆற்றினார் முனைவர். அ. நித்யா அவர்கள்!

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (FAC) முனைவர். கே.எம். சுமதி அவர்கள் தலைமை தாங்கி, தலைமையுரை (Presidential Address) ஆற்றி நிகழ்ச்சியினை முறைப்படி தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்கும் மாணவ-மாணவிகள் தங்களின் இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்து சாதிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இணைய குற்றத்தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு:

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில், "மனித உரிமைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு" (Human Rights and Women Safety) என்ற தலைப்பில் திண்டுக்கல் சைபர் கிரைம் (இணைய குற்றப்பிரிவு) காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் திரு. எஸ். ராஜமாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தற்கால டிஜிட்டல் உலகில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துகள், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம்:

"மாணவர் நல்வாழ்வு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்" (Student Wellbeing Health and Hygiene) என்ற தலைப்பில் மனித உரிமைகள் கழகத்தின் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், வேலுநாச்சியார் சீனை அறக்கட்டளையின் செயலாளரும், அகஸ்தியா அறக்கட்டளையின் உறுப்பினரும் மற்றும் 'சைல்டு வாய்ஸ்' அறக்கட்டளையின் அறங்காவலருமான Dr. பி. ஜெயவனிதாமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களின் மனநலம், உடல் ஆரோக்கியம் மற்றும் தூய்மையின் அவசியம் குறித்து மிக விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

மாணவர் உதவி அமைப்புகள் விழிப்புணர்வு:

மேலும், "மாணவர் உதவி அமைப்புகள்" (Student Support Systems) என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையைச் சார்ந்த பெண் காவலர் குழுவினர் நேரில் வருகை தந்து, மாணவிகளுக்கான அவசர உதவி எண்கள், தற்காப்பு முறைகள் மற்றும் அரசு வழங்கி வரும் பல்வேறு உதவி அமைப்புகள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர். ஜெ. மருதுபாண்டி அவர்கள் மாணவர்களின் விளையாட்டுத் துறை சார்ந்த வாய்ப்புகள் மற்றும் உடற்தகுதி குறித்து உரையாற்றினார். இறுதி நிகழ்வாக, விடுதி காப்பாளர்கள் (Hostel Wardens) விடுதி மாணவர்களுக்கான விதிமுறைகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து மாணவர்களிடையே விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முனைவர். அரு. முருகன் அவர்கள் தொகுத்து வழங்கியதுடன், விழாவின் நிறைவாக நன்றியுரையையும் வழங்கினார்."