முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – ஆறாம் நாள் நிகழ்வு

08 Jul 2026

கல்லூரி முதல்வர் முனைவர். க. மா. சுமதி அவர்கள், ஒழுக்கத்தோடு கூடிய கல்வியே இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும். இயற்கையிலே மனிதனுக்கு உடல், மனம், அறிவு என்ற மூன்று அளப்பரிய சக்திகள் அமைந்துள்ளன. இவற்றை முறையான பயிற்சியின் மூலம் பயன்படுத்தும்போது மனிதனின் வாழ்வியல் சிறப்பாக அமையும் என்றார்.

திண்டுக்கல் மனவளக்கலை மன்ற இயக்குநர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், "பிராணாயாமம், மனவளம் பெருக்குதல், உடல் ஆரோக்கியம் பெறுதல், பாதுகாப்பான உணவு முறை, மன அழுத்தம் குறைத்தல், மனத்திற்கும் மூச்சிற்கும் உள்ள தொடர்பு, மூச்சினை அடக்கி ஆளக் கற்றவர்க்கு ஆயுள் அதிகரிக்கும் முறைமை" ஆகியன பற்றிப் பேசினார்.

எரியோடு அரசு மருத்துவர் விஜயசாரதி அவர்கள் மாணவர்களை வாழ்த்திப் பேசினார். அவர்தம் உரையில், "குழந்தைத் திருமணம் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளமாவை. இளம் வயதுத் திருமணம் ஏற்படுத்தும் பாதிப்புகள், உடல் ஆரோக்கியம் பேணும் முறை ஆகியவற்றை விளக்கினார். சாதாரண சிக்கல் மற்றும் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வுகாண இயலாமல் இறுதியில் தற்கொலை அளவிற்குச் செல்லும் நிலை இன்னும் வேடசந்தூர் வட்டாரத்தில் காண முடிகிறது. உலக அளவில் 20 கோடி நபர்கள் HIV பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 1986-இல் சென்னை CMC மருத்துவமனை மருத்துவர் நிர்மலா அவர்கள் HIV நோய் பற்றி ஆராய்ந்தார்" எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் பிற்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவர்களுக்கு எண்வகை யோக முறை பற்றிய செயல்முறைப் பயிற்சி சிறந்த பயிற்றுநர்களால் வழங்கப்பட்டது.