போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
13 Aug 2026
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, நமது வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் 'போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி' சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். க.மா.சுமதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், சுமார் 600 மாணவ-மாணவியர் மற்றும் 20 பேராசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கல்லூரியில் இருந்து தொடங்கி எரியோடு பேருந்து நிலையம் வரை (3 கி.மீ.) நடைபெற்ற இப்பேரணியில், விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் முழக்கங்கள் மூலம் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஆங்கிலத் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. சுந்தரராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஜெ. மருதுபாண்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!
போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம்!
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Please click here to watch the video
-Back


























