பாரதி தமிழ் வளர்ச்சி மன்ற தொடக்க விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்த விழா

04 Aug 2026

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய "பாரதி தமிழ் வளர்ச்சி மன்றத் தொடக்க விழா" 04.08.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று திருவள்ளுவர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது! 

வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU):

மாணவர்களின் தமிழார்வத்தை வளர்க்கும் நோக்கில், அரசுக்கல்லூரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

நிகழ்ச்சி சிறப்பம்சங்கள்:

தலைமை: 
கல்லூரி முதல்வர் முனைவர். க.மா.சுமதி அவர்கள் தலைமை தாங்கி விழாவினைச் சிறப்பித்தார்.
 
வரவேற்புரை: 
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ச. அமுதவல்லி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
 
சிறப்புரை: 
கவிஞர் கவிவாணன் (த.மு.எ.ச திண்டுக்கல் மாவட்டத் தலைவர்):
"பாரதியால் தமிழ் சிறப்படைந்ததா, தமிழால் பாரதி சிறப்படைந்தானா என்ற கேள்விக்கு—தமிழால் பாரதியும், பாரதியால் தமிழும் என்பதே உண்மை! தமிழால் பாரதி தலைமைத்துவம் பெற்றது போல், இளந்தலைமுறையினரும் தமிழ் மொழியால் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்!"
 
வாழ்த்துரை:
கவிஞர் தாமோ (த.மு.எ.ச திண்டுக்கல் மாவட்டச் செயலர்):
" 'எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை' என்ற பாரதியின் கனவு இன்று பெண்கல்வியின் உயர்வால் நனவாகி வருகிறது!"
 
நிகழ்வில் த.மு.எ. சங்க மாவட்டத் துணைத்தலைவர் கவிஞர் சுசீலா மேரி, உறுப்பினர்கள் வைத்தியலிங்க பூபதி, பாலமுருகன், ராபர்ட் கென்னடி, வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
 
நன்றியுரை: 
தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். அ. கார்த்திகேயன் அவர்கள் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.